உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசு சதி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
56 பார்வைகள்

தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல், தங்களது ஆட்சிக் காலத்தை நீடித்துக்கொள்வதற்காகவே அரசு 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கையில் எடுத்துள்ளது.

சில அமைச்சர்கள் தேர்தல்கள் வராது எனப் பிரகடனம் செய்த போதிலும், ஜனாதிபதியோ அரசின் பேச்சாளரோ அதனை இதுவரை மறுக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல்களின்படி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2026இல் 8.6 பில்லியன் டொலர்களாகவும், 2027இல் 12 பில்லியன் டொலர்களாகவும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தவித உற்பத்தி வளர்ச்சியோ புதிய முதலீடுகளோ இல்லாமல் வெறும் சமூக வலைத்தள விளம்பரங்களைக் கொண்டு நாட்டை நடத்த முடியாது.

கடந்த 2022 மார்ச் 7 அன்று இலங்கை வங்குரோத்தாகும் நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் இரகசியக் கடிதம் மூலம் எச்சரித்திருந்தும், அதற்குக் காரணமான எவர் மீதும் தற்போதைய அரசு இதுவரை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைத்து மக்களின் கவனத்தை வேறு திசைக்குத் திருப்புவதற்காகவே அரசு இத்தகைய நாடகங்களை நடத்துகின்றது.

அரசின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. கூட்டு எதிர்க்கட்சியாக நாடு முழுவதும் சென்று மக்களை விழிப்புணர்வூட்டவுள்ளோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை.!

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம்…

37 0 0
இலங்கை செய்திகள்

கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி மனைவி உயிரிழப்பு.!

தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

58 0 0
இலங்கை செய்திகள்

கெஹல்பத்தர பத்மேவின் கைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்; சிக்கப்போகும் முக்கிய நபர்கள்.!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில் இருந்து ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், மொடல்கள்…

60 0 0
இலங்கை செய்திகள்

புனித மீலாதுன் நபி தினம் இன்று.!

இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் ‘மீலாதுன் நபி’ (ஈத்-ஏ-மீலாத்) புனித தினம் இன்று (26) ஆகும். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால்…

37 0 0