உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உந்துருளி பாவனை தொடர்பில் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
76 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் தலைக்கவசமின்றி ஒரே உந்துருளியில் மூவர் பயணித்த நிலையில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, உந்துருளி பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2026.11.03ஆம் திகதி சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உந்துருளியில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உந்துருளிகளை வழங்கிய பெற்றோரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் இணைந்து பொதுமக்களுக்கு ஐந்து முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

அதன்படி, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, தலைக்கவசம் அணியாமல் உந்துருளிகளை வேகமாகச் செலுத்துவதைத் தவிர்த்தல், இரண்டு பேருக்கு மேற்பட்டோர் உந்துருளியில் பயணிப்பதைத் தவிர்த்தல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு உந்துருளிகளை வழங்குவதைத் தவிர்த்தல், போக்குவரத்து விதிகளையும், போக்குவரத்துப் பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும் மதித்து வாகனம் செலுத்துதல், கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் – ஏனையோருக்குத் தொந்தரவு விளைவிக்கும் வகையிலும் உந்துருளிகளைச் செலுத்துவதைத் தவிர்த்தல்.

மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உந்துருளிகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படக்கூடிய இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து, சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த அறிவித்தல் 2026.11.04ஆம் திகதி பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் அல் ஹாஜ் எம்.எல். அப்துல் மஜீத் JP அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நியமனம் இரத்து.!

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (Writ…

58 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்; வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு கண்டனம்.!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பணிக்குச் சென்ற முஸ்லிம் தாதிமார்கள் தலையை மறைத்திருந்தார்கள் எனக் கூறப்பட்டுப் பணியைப் பாரமெடுக்கத் தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணமானவராகவும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவருமான…

66 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போ*தைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து, உரிமம் இல்லாமல் கஞ்சா கலந்த மதன மோதகம் விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மஸ்கெலியா பொலிஸாரால் (04) நேற்று சந்தேகநபர்…

78 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி இலக்குகளை அடைவதில் பாரிய சவால்கள்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியாளர்களுக்கு மின்சார உற்பத்திக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வீட்டு மட்டத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறு…

70 0 0