உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து; வீடு தீக்கிரை.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
79 பார்வைகள்

கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை(4) மாலை ஏற்பட்ட இத் தீ விபத்தையடுத்து கல்முனை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன. எனினும், ஒரு வாகனத்திலிருந்து மற்றைய வாகனத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை தாமதமாக இடம்பெற்ற பின்னரே தீயணைப்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்பு வாகனங்கள் நீரைச் சீரமைத்துத் தயார் நிலைக்கு வருவதற்குள் குறித்த வீடு முழுமையாகத் தீக்கிரையாகிவிட்டது.

“அவசர காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பெறுமதியானது. உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசர சேவையில் இவ்வாறான நீர் பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் ஏற்படுவது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது” என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நியமனம் இரத்து.!

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (Writ…

58 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்; வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு கண்டனம்.!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பணிக்குச் சென்ற முஸ்லிம் தாதிமார்கள் தலையை மறைத்திருந்தார்கள் எனக் கூறப்பட்டுப் பணியைப் பாரமெடுக்கத் தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணமானவராகவும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவருமான…

66 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போ*தைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து, உரிமம் இல்லாமல் கஞ்சா கலந்த மதன மோதகம் விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மஸ்கெலியா பொலிஸாரால் (04) நேற்று சந்தேகநபர்…

78 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி இலக்குகளை அடைவதில் பாரிய சவால்கள்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியாளர்களுக்கு மின்சார உற்பத்திக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வீட்டு மட்டத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறு…

70 0 0