உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

வேலணை பிரதான வீதிகளில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார பாதிப்பு – மக்கள் பெரும் கவலை!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
29 பார்வைகள்

வேலணையின் பிரதான வீதியோரங்களில் இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாக வீசப்படும் வீட்டுக் கழிவுகள் மற்றும் திண்மக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதுடன், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு சுகாதார ரீதியான அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதி, வேலணையின் பிரதான வீதிகளான குறிகாட்டுவான் வீதி, வங்களாவடி – வேலணை மத்திய கல்லூரி ஊடாக புளியங்கூடல் செல்லும் வீதி உள்ளிட்ட முக்கிய மார்க்கங்களின் பல பகுதிகளில் நாளாந்தம் வீதியோரங்களில் இவ்வாறு இனந்தெரியாதோராக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவகின்றது.

குறிப்பாக வேலணை மத்திய கல்லூரிக்கு அண்மித்த பகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்ட வயோதிபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ‘பம்பஸ்’ போன்ற கழிவுகளும் வீதியோரங்களில் கொட்டப்பட்டிருந்ததால் துர்நாற்றம் வீசியதுடன், அப்பகுதியை கடந்து செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியத்தையும் ஏற்படுத்திவருகின்றது.

இதேவேளை வேலணை பிரதேச சபையினால் தொடர்ச்சியாக சுகாதார மற்றும் துப்புரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிலர் பொறுப்பற்ற வகையில் வீதியோரங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிச் செல்வது பிரதேச சபையின் சுகாதாரப் பணிகளுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதுடன், துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேடுகளை உருவாக்கி பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்னிலையில் வீதியோரங்களில் கழிவுகளை கொட்டுவோரைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும், பொதுமக்கள் தமது வீட்டுக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றி, பிரதேச சபையின் கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளதுடன் இது தொடர்பில் வேலணை பிரதேச சபையினால் பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைவதாக ரயில் நிலைய…

29 0 0
இலங்கை செய்திகள்

சவுதியில் அனுஜனுக்கு எதிரான வழக்கு: இலங்கை அரசு தீவிர கண்காணிப்பு

சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா…

23 0 0
இலங்கை செய்திகள்

தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினால் குறித்த முறைப்பாடு…

27 0 0
இலங்கை செய்திகள்

விமல் வீரவன்சவின் கருத்துத் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி…

29 0 0