உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
123 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் இன்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் குறித்த 09 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் 09 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் 09 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0