உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தீர்மானம்

இந்திய செய்திகள் 2 வாரங்கள் முன்
84 பார்வைகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள இந்தத் தீர்மானத்தில், தமிழுக்கு வழங்கப்பட்டுள்ள செம்மொழி அந்தஸ்து மற்றும் சட்டத்துறையில் கலைச்சொற்களை உருவாக்குவதில் தமிழ் மொழி அடைந்துள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மின்னணு நீதிமன்றங்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான மொழிபெயர்ப்பு வசதிகள், சட்டத் தரவுத்தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, நீதித்துறையில் மொழிப் பயன்பாடு தொடர்பான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் இருப்பதுடன், சாட்சியங்களை பதிவு செய்வது உள்ளிட்ட நீதித்துறை நடவடிக்கைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளதாகவும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்படலாம்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகள், ஆணைகள் மற்றும் ஏனைய நீதித்துறை உத்தரவுகளை தமிழிலும் கிடைக்கச் செய்வதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி தமிழக சட்டப்பேரவையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானம் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு ஒப்புதல் வழங்கவில்லை என 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மாநிலங்களவையில் அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேள்வி நேரம் நிறைவடைந்த பின்னர் முதலமைச்சர் விஜய் இந்தத் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தீர்மானம் தொடர்பில் சட்டப்பேரவையில் விவாதம் இடம்பெறக்கூடும் எனவும், பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான…

17 0 0
இந்திய செய்திகள்

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் (Silverstone) சிற்றூந்து பந்தய போட்டியை கொடியசைத்து ஆரம்பித்து வைக்க…

133 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்யின் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்

தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் குடும்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதெல்லாம், அவை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில்,…

120 0 0
இந்திய செய்திகள்

பயணிகள் வானூர்தியில் லண்டனைச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இன்று (11) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன்…

179 0 0