புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.!
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், தமிழ் மொழி மூலத்தில் யாழ்ப்பாணம், மல்லாகம் மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
யாழ். வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட, ஆரம்பப் பிரிவை மட்டுமே கொண்டுள்ள மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த சுரேந்தர் சபின் என்ற மாணவனே இந்தச் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இந்த மாணவன் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் முதலிடத்தைத் தனதாக்கியுள்ளார்.
மல்லாகத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இந்த மாணவனின் தந்தை, கிளிநொச்சி மாவட்டத்தில் விளையாட்டு உத்தியோகத்தராகப் பணிபுரிகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.