உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

எகிப்துக்கு சீன ஜனாதிபதி பயணம்

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
84 பார்வைகள்

மேற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்சிசியை சந்தித்த ஷி ஜின்பிங், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சர்வதேச அரங்கில் நிலவும் தன்னிச்சையான ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சர்வதேச விவகாரங்களில் நியாயமான மற்றும் சமத்துவமான நிர்வாக நடைமுறையை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை நிலைப்பாட்டுக்கு எகிப்து தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்சிசி உறுதியளித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச எரிபொருள் விநியோகத்துக்கான முக்கிய மாற்றுப் பாதையாக காணப்படுகிறது.

அத்துடன், அரபு நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே சமரசப் பங்காளியாக சீனா தன்னை முன்னிறுத்துவதற்கும், எகிப்துடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக எகிப்துடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!!

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செயற்கைக்கோள் நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள்…

12 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

42 0 0
உலக செய்திகள்

இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்!

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

49 0 0
உலக செய்திகள்

இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள் : இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை

இந்தியாவில் மீட்கப்பட்ட ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளை அவற்றின் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தோனேசிய அரசு முதன்முறையாக…

22 0 0