உழவு இயந்திரம் மோதி சிறுமி உயிரிழப்பு!
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை வீதி ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமியே இந்தச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய 32 வயதுடைய சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.