உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நூதன முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் கைது!

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
44 பார்வைகள்

இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான போது இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவின் நாகப்பட்டினத்துக்குப் புறப்படத் தயாராக இருந்த 19 பயணிகளையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில், இவர்கள் தங்கத்தை நூதனமான முறையில் மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேகநபர்களையும் ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டம் : சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தோற்கடிப்பார்கள்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன…

2 0 0
இலங்கை செய்திகள்

உழவு இயந்திரம் மோதி சிறுமி உயிரிழப்பு!

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை வீதி ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த…

38 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமைக்கு சுமந்திரன் கடும் கண்டனம்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும்…

73 0 0
இலங்கை செய்திகள்

நிதி அல்ல எமக்கு நீதியே முதன்மையானது.!

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான். ஆனால், அதைவிட எமக்கு நீதியே மிக முக்கியமானது! நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு.…

44 0 0