உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்.!

இலங்கை செய்திகள் 53 நிமிடங்கள் முன்
36 பார்வைகள்

சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகாணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் முன்னாள் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கலாநிதி தணிகாசலம்பிள்ளை எழுதிய இரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தலைமையை உரையை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நூலாசிரியர் தணிகாசலம்பிள்ளை எங்களுடைய ஆசான் இந்தக் கல்லூரியின் மைந்தன் 15 நூல்களை எழுதி இருக்கிறார். இரு நூல்களை வெளியிட்டு இருக்கிறார்.

எமது வடக்கு கல்விப் புலமானது கல்வியால் உயர்ந்த ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்ற தூர நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதால் இவ்வாறான நூல் வெளியீடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

குறிப்பாக ஆரம்பப் பிரிவு கல்வியை கட்டமைத்த ஒரு மாகாணமாக வடமாகாணமே முதன்மையாக இருந்து வருகின்ற நிலையில் அதற்கு அமரர் டிவகலாவின் பங்கு காத்திரமானது.

நூல் ஆசிரியர் தணிகாசலம்பிள்ளை சிறந்த கல்விமான். தனது தள்ளாடும் வயதிலும் கல்விக்கும் சமூகத்திற் பல்வேறு சேவையை ஆற்றி வருகிறார்.

ஆகவே வடக்கு மாகாணம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இவ்வாறான பல நூல்கள் வெளிவர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

சிறிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுகெலே குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய…

23 0 0
இலங்கை செய்திகள்

புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

புங்குடுதீவு கடற்கரையில் இன்று புதன்கிழமை (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை…

70 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!

புத்தளம் வென்னப்புவ – வைக்கால ரயில் கடவையில் நேற்று (25) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச்…

63 0 0
இலங்கை செய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்.!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்குள் நபரொருவர் செயற்பட்ட விதம் தொடர்பில் குறித்த சந்தேக நபரைக் கைது செய்த குழுவுக்குப் பொறுப்பாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உடனடியாக அமுலுக்கு…

70 0 0