உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிணையில் விடுதலை!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
83 பார்வைகள்

நடிகை த்ரிஷா தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, அதே நாளில் பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை விமர்சித்து ஆற்றிய உரையின்போது உதயநிதி இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

பாலியல் ரீதியான மறைமுகக் குறிப்பாகவும், த்ரிஷாவுடனான விஜய்யின் நட்பைக் குறிப்பதாகவும் பரவலாகக் கருதப்படும் அந்தப் பேச்சுக்கு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

விசாரணையின்போது, உதயநிதியைத் தஞ்சாவூர் பொலிஸார் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தமிழக அரசின் தலைமை சட்டத்தரணி விஜய் நாராயண் சென்னை மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், அவரை நீதிமன்றக் காவலில் அடைக்கக் காவல்துறைக்கு எண்ணம் இல்லை என்றும், பொலிஸ் நிலைய பிணையில் விடுவிப்பதற்கு முன்னதாக அவரிடம் விசாரணை மட்டுமே நடத்த விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் இன்று

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(06) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு…

68 0 0
இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

93 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

86 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

79 0 0