நைஜீரியாவில் இராணுவ வானூர்தி விபத்து : 25 பயணிகள் உட்பட 32 பேர் உயி@ரிழப்பு!
நைஜீரியாவின் பெனின் நகரத்திலிருந்து லாகோஸ் நோக்கிப் பயணித்த அந்த நாட்டு இராணுவத்திற்குச் சொந்தமான ஏடிஆர்-42 (ATR-42) ரக வானூர்தி தென்மேற்கு மாநிலமான ஓண்டோவில் விபத்துக்குள்ளானதில், 25 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை நைஜீரிய ஜனாதிபதி போலா அகமது தினுபு உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக முறைசார் விசாரணையைத் தொடங்குமாறு நைஜீரிய வானூர்திப்படைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைக் காலத்தில் நைஜீரியாவில் பதிவான மிகவும் மோசமான வான் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.