உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கர்நாடகாவில் 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி!

இந்திய செய்திகள் 3 வாரங்கள் முன்
115 பார்வைகள்

கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் கவலை அதிகரித்துள்ள நிலையில், நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, எச்.ஐ.வி தொற்று தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் சுகாதாரத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0