உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வங்கி முகாமையாளரைத் தாக்கிய வழக்கு – கருணாநிதியின் பேத்திக்குப் பிணை!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
122 பார்வைகள்

சென்னை அடையாறு பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக சாஸ்திரி நகர் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

எனினும் காவல்நிலைய பிணையில் உடனடியாக செல்ல அனுமதித்துள்ளனர்.

திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில், காந்தி நகர் குறித்த வங்கிக் கிளை செயற்பட்டு வருகிறது.

அந்தக் கட்டிடத்தில் இருந்த மின்தூக்கி; நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், அதை சீரமைக்கும்படி கட்டிட உரிமையாளரான கயல்விழியை வங்கி நிர்வாகம் பலமுறை கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கயல்விழி தரப்பு குறித்த மின்தூக்கியை சரி செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, வங்கிக் கிளை முகாமையாளர் நேரடியாக கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் பேசியபோது, ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி முகாமையாளரின் கன்னத்தில் அறைந்ததாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சாஸ்திரி நகர் காவல்துறையினர் நேற்று காவல்நிலையத்துக்கு வந்த கயல்விழியை கைது செய்து விசாரணையின் பின்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் இன்று

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(06) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு…

68 0 0
இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

93 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

86 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

79 0 0