உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதத்துக்கு பிற்போடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
123 பார்வைகள்

2026 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போட்டு நவம்பர் மாதம் நடத்துவதால் பாரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொதுமனுக்கள் பற்றிய குழுவின் நடவடிக்கைமுறை மற்றும் செயலாற்றுகை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு 800 நாட்களுக்கு மேற்பட்ட காலம் வழங்கப்பட்டிருந்த போதிலும், 2026 ஆம் ஆண்டுக்கான அவகாசம் 709 நாட்களாகவே வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் ஊடாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதால், அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலமே இதற்குத் தீர்வுகாண வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்தபோது மாணவர்களின் உரிமைகள் குறித்துக் குரல் கொடுத்தது. எனவே, தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசு மாணவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு உரிய முடிவை எடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0