உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
120 பார்வைகள்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்கள் உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் யக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடையவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று (16) வியாழக்கிழமை இரவு யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆயுதக் குவியல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 கைக்குண்டுகள், 32 பிஸ்டல் தோட்டாக்கள், எச்-16 (M-16) ரக துப்பாக்கி மற்றும் அதன் 11 தோட்டாக்கள், 06 ரிவோல்வர் தோட்டாக்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 34,000 சிகரெட்டுகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

40 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

58 0 0