உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

துறைமுகங்கள், விமான நிலையங்களின் செயற்றிறனை மேம்படுத்த ஜனாதிபதி பணிப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
108 பார்வைகள்

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது துறைமுக மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளை நவீனமயமாக்கல் மற்றும் நிதி முகாமைத்துவம் குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள், காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு, கொழும்பு துறைமுக லொஜிஸ்டிக் பார்க் மற்றும் மேற்கு முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து ஆராயப்பட்டது. துறைமுக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது.

2055ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் கொள்ளளவை 24.2 மில்லியனாக உயர்த்தும் நோக்கில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்தும் இரண்டாம் கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன. புதிய முனையங்களை அமைத்தல் மற்றும் போக்குவரத்துச் சேவைகளை முறைப்படுத்துதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஹிகுராக்கொட உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களைச் சீரமைக்க, விமானப்படையுடன் இணைந்து கூட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

மத்தல விமானநிலையம் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நட்டத்தைத் தவிர்க்க, புதிய முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரியுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டளவில் அதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாண விமான நிலைய முனைய நவீனமயமாக்கல் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

நிறுவனங்கள் தங்களின் சொந்த நிதி வலிமையைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களின் வரிப்பணத்திற்குச் சுமையாக அமையாத வகையில், திறைசேரிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் தெளிவாக அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை துறைமுக அதிகார சபை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள அனைத்து முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

38 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

58 0 0