இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து.!
கொடகம – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில் இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான சுமார் 20 பேர் ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் அதன் சாரதி சிக்கிய நிலையில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரப் முயற்சிக்கு பின்னரே அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தினால் டிப்பர் வாகனத்திற்கும் பேருந்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.