உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

கண்ணீர் மட்டுமே அன்பின் அடையாளம் அல்ல!

சினிமா 3 நாட்கள் முன்
101 பார்வைகள்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஜானகியின் இறுதிச் சடங்கின் போது, அவரது பேத்தி அப்சரா வைத்யுலா கண்கலங்காமல் நின்றது சமூக வலைதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் “பாட்டி மீதான அன்பு இல்லையா?” என்பது போன்ற விமர்சனங்களுக்கு, அப்சரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான மற்றும் ஆழமான விளக்கத்தை அளித்துள்ளார்.

தன் பாட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் தன் அக்கா வர்ஷா என்பதைச் சுட்டிக்காட்டிய அப்சரா, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அந்த அழகான பிணைப்பை வார்த்தைகளால் விளக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன் அக்கா வர்ஷாவை இழந்த அந்த அதிர்ச்சியிலிருந்து தன் குடும்பம் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று அப்சரா தனது வலியினைப் பகிர்ந்துள்ளார்.

தன் அக்காவும், பாட்டியும் இப்போது சொர்க்கத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்துவிட்டார்கள் என்பதைத் தனக்கான ஒரே ஆறுதலாகப் பார்க்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

“கண்ணீர் மட்டுமே அன்பின் அடையாளம் அல்ல. ஒருவரின் கண்ணீரை வைத்து அவரது துக்கத்தை எடை போடாதீர்கள்” என்று கூறியுள்ள அப்சரா, பாட்டியின் மீது தான் வைத்திருக்கும் அன்பை யாரும் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“வாழ்க்கை முடிவுக்கு வரலாம், ஆனால் அன்பு என்றும் முடிவதில்லை என்பதை என் பாட்டி எங்களுக்குக் கற்பித்துள்ளார்” என்று அவர் பதிவிட்டுள்ள இந்த வரிகள், தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் ‘ஜனநாயகன்’

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் திகதி வெளியாகவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா அறிவித்துள்ளார். இந்தியாவைத் தவிர்த்து, உலகம் முழுவதும் 30-க்கும்…

67 0 0
சினிமா

விரைவில் திரைக்கு வருகிறது சூர்யாவின் ’47’ திரைப்படம்

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘சாகரம் ஸ்டுடியோஸ்’ (Zhagaram…

91 0 0
சினிமா

ஹெய்ஸ்ட் வகை திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே எனது நீண்டநாள் ஆசை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் இயக்க விரும்பும் திரைப்படத்தின் பாணி குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநராக வேண்டும்…

105 0 0
சினிமா

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்…

13 0 0