உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்திய ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல்!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
58 பார்வைகள்

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மைதானத்தில் பதாகை ஏந்திப் போராடிய விவகாரம், தற்போது பிரித்தானிய மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய ராஜதந்திர மோதலாக உருவெடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, ஆர்ஜென்டினா வீரர்கள் , ஃபாக்லாந்து தீவுகள் ஆர்ஜென்டினாவிற்குச் சொந்தமானவை என்ற பதாகையைக் காட்டியதற்கு பிரித்தானியாவின் வணிகத்துறை அமைச்சர் பீட்டர் கைல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மைதானத்திற்குள் அரசியல் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் கால்பந்து சம்மேளனத்தின் விதிகளை இந்தச் செயல் அப்பட்டமாக மீறியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கைல், இது குறித்து உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், “கால்பந்து செம்பியன்ஷிப் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் ஃபாக்லாந்து தீவுகள் நிச்சயமாக நமக்குத்தான் சொந்தம்” என்று டவுனிங் ஸ்ட்ரீட் பேச்சாளர் ஒருவர் ஆர்ஜென்டினாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தெரிவித்துள்ளார்.

அரையிறுதிப் போட்டி முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே, இரண்டு நாடுகளுக்கும் இடையே மற்றொரு தூதரக மோதலும் வெடித்துள்ளது.

இதில் ஒரு சம்பவமாக, இருதரப்பு ஒப்பந்தங்களை மீறும் வகையில் செயற்பட்ட பிரிட்டன் கப்பலுக்கு எதிராக, பியூனஸ் அயர்ஸில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் ,ஆர்ஜென்டினா அரசாங்கம், முறைப்படி தனது தூதரக எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் 1982-இல் நடந்த போரின் வடுக்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் என்பன, 2026 கால்பந்து செம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியை, வெறும் கால்பந்து போட்டியாக இல்லாமல், இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சீனாவில் பாரிய நிலச்சரிவு.!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட…

48 0 0
உலக செய்திகள்

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது. இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும்,…

97 0 0
உலக செய்திகள்

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அந்தநாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்ஹெய்லே ஃபெடோரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இந்த முடிவு யுக்ரைன் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு,…

81 0 0
உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரம் – 754 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதுடன், இதுவரை 754 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்…

74 0 0