உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஆளுநர்களின் தொடர் பதவி விலகல்; பிரதமரும் பதவியைத் துறப்பாரா?

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
118 பார்வைகள்

மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாக இராஜினாமா செய்து வரும் சூழலில், தற்போதைய பிரதமரும் தனது பதவியை இராஜினாமா செய்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய மாகாண ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்தமைக்கு சில தரப்பினரின் அழுத்தங்களே காரணம் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்த அவர், அரசில் உள்ளவர்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அடுத்தடுத்து நியமிக்கப்படும் ஆளுநர்கள் எத்தனை நாட்கள் பதவியில் நீடிப்பார்கள் என்பது கேள்விக்குறியே என்றும் அவர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அண்மைய கருத்துகள் குறித்தும் சீலரத்ன தேரர் விமர்சித்தார். “தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கிராமங்களுக்குச் சென்று கூறிவருவது அரசுன் மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றது. அரசுக்கு முழு அதிகாரமும் இருக்கும்போது, அதிகாரமில்லை என்று கூறுவது பொய்யானதாகும். இளமைக் காலத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்குச் சிறிதளவேனும் அறிவு இருக்க வேண்டும். போதைப்பொருட்களை உட்கொண்டுவிட்டு மேடைகளில் பேசுகின்றார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது. இவர்களின் இத்தகைய பேச்சுகள் ஜனாதிபதியின் கௌரவத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன” என்று அவர் சாடினார்.

இந்தச் சூழலில், மாகாண ஆளுநர்களைப் போல் கலாநிதியாக இருக்கும் தற்போதைய பிரதமரும் தனது பதவியை விரைவில் இராஜினாமா செய்வாரோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0