உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி ஒரு ‘புரோக்கர்’ கூட்டு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
106 பார்வைகள்

தமிழ் பேசும் கட்சிகள் நேற்றுமுன்தினம் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல என்றும், அவை வெறும் ‘புரோக்கர்’ (தரகு) வேலைகளே என்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
“தமிழ் பேசும் கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிலர் கொழும்பில் ஒன்றுகூடியுள்ளனர். இவர்கள் ஏன் தங்களின் சொந்தத் தாயகமான தமிழ்ப் பிரதேசங்களில் கூட்டத்தை நடத்தவில்லை? இதற்கு முக்கிய காரணம், இவர்கள் கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள். இவர்களின் பிள்ளைகள் தென்பகுதியில் திருமணம் முடித்தவர்கள், கொழும்பிலேயே தங்கியிருப்பவர்கள்.

தென்பகுதியில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றார்கள். அதற்கு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தரகு வேலைகளைப் பார்க்கின்றார்கள். மக்கள் இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்கின்றார்கள். எனவே, இது மக்களுக்கான கூட்டம் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகக் கூடியவர்களின் கூட்டம்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு, வடக்கு மாகாணத்தில் ஒரு கூட்டத்தைக் கூட நடத்தத் துணிவற்ற இவர்கள், கொழும்பில் உள்ள ஹோட்டல்களில் சென்று கூடியிருப்பது வெட்கக்கேடான விடயமாகும்.” – என்று அவர் சாடினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0