உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சிறைச்சாலை வன்முறை; அநுர அரசுக்கு எதிராக ஐ.நா.விடம் முறையிட்டது எதிர்க்கட்சிகள் கூட்டணி.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
115 பார்வைகள்

நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில், ஜனநாயக மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு தலைமையகத்திற்குச் சென்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச்சைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

இந்தச் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தலதா அத்துகோரள, பிரேமநாத் சி. தொலவத்த, அசாத் சாலி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அரசின் உத்தேச நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாகத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

“இலங்கையில் எவரும் இவ்வாறான மாற்றத்தைக் கோரவில்லை. சட்டத்தரணிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு வெளிப்படைத்தன்மையுமின்றி அரசு முன்னெடுக்கும் இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “அரசமைப்பின் 12(1) பிரிவின் கீழ் வரும் சமத்துவக் கோட்பாட்டுக்கு முரணாக, நீதிபதிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் பதவிக்காலத்தை நீடிக்க அரசு முனைகின்றது. நாட்டில் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காது, வீணான குழப்பங்களை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக உள்ளது.” – என்று அவர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கலாநிதி சுரேன் ராகவன், “சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்தும், இதுவரை இடைக்கால அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்கள் போன்ற குறைந்தபட்ச பலப்பிரயோக முறைகளைக் கையாண்டிருக்க வேண்டும். இந்த வன்முறையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டனை வழங்கப்படாத நிலையில், இவர்களின் ‘வாழும் உரிமை’ பறிக்கப்பட்டுள்ளது. இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானதாகும்.” – என்று தெரிவித்தார்.

அரசின் நிர்வாகத் திறன் குறித்து விமர்சித்த அவர், “முறைமை மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்தனர். ஆனால் அனுபவமற்ற நிர்வாகமே தற்போதைய நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. ஜனநாயகக் கட்டமைப்புக்குள் நின்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு ‘இதுவே போதும்’ என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்” – என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0