உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
110 பார்வைகள்

நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமானச் சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துவதற்குச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பத்தில் இதுவொரு சோதனைத் திட்டமாக அமுல்படுத்தப்படும் எனச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையில் பயன்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய பயணிகள் ட்ரோன் போக்குவரத்துச் சேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பாட்டில் உள்ளன என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த நாடுகளின் வெற்றிகரமான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கையிலும் இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0