உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மெட்டாவின் மெகா திட்டம் – 50பில்லியன் டொலர் முதலீடு!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
131 பார்வைகள்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள தனது தரவு மையத்தை விரிவுபடுத்தப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹைபெரியன் என்று அழைக்கப்படும் இந்த தரவு மையத்தின் முதலீடு 50 பில்லியன் டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், தரவு மையத்தின் கம்ப்யூட் திறன் 5 ஜிகாவோட்டாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1 பில்லியன் டொலருக்கும் மேல் செலவிடப்பட உள்ளது.

மேலும், இந்த தரவு மையத்தால் கிடைத்த வரி வருவாய் மூலம், ரிச்லேண்ட் பாரிஷ் பகுதியில் உள்ள ஆசிரியர்களுக்கு 50,000 டொலர் வரையிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த திட்டத்தினால் ஏற்படும் அதிகபடியான மின்சாரத் தேவை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய செலவுகள் குறித்து சில சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.

உலகளவில் AI தொழில்நுட்பத்திற்கான போட்டி அதிகரித்து வரும் சூழலில், மெட்டா நிறுவனம் தனது தரவு மையங்களை விரிவுபடுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் மெட்டா நிறுவனம் 32 தரவு மையங்களைச் செயல்படுத்தி வருகிறது அல்லது கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0