உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

ஐ.எம்.எவ்வின் நிபந்தனைகளைத் தாண்டி மக்களை ஒடுக்கும் ‘எல் போர்ட் அரசு’.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
99 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசு, ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார இணக்கப்பாடுகளையும் தாண்டி, தீவிர வலதுசாரி நவதாராளவாத வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

குருநாகல், பன்னலயில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதை விடவும் அதிக வரிகளை இந்த அரசு விதித்து வருகின்றது. முதன்மைக் கணக்கு 2.3% ஆக இருக்க வேண்டிய நிலையில், அதை 5.4% ஆக உயர்த்தி, ஐ.எம்.எவ்வின் செல்லப் பிள்ளையாக மாற அரசு முயற்சிக்கின்றது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலையின்றி, அரச வருமானத்தை 15.4% ஆக உயர்த்த வரி மற்றும் செலவினக் குறைப்புகளை இந்த அரசு மேற்கொள்கின்றது.

அரசு, எதிர்க்கட்சியின் வாயை மூடுவதுடன், சுயாதீன நீதித்துறைக்கு முறையற்ற செல்வாக்கைச் செலுத்துகின்றது. நீதித்துறையைத் தனது கைப்பாவையாக மாற்ற முயற்சிக்கின்றது. நீதியரசர்களின் நியமனங்கள் மற்றும் ஓய்வுபெறும் வயது தொடர்பான விவகாரங்களில் அரசு மேற்கொள்ளும் அழுத்தங்கள் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

நெற்செய்கை விவசாயிக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபாய் நட்டத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் 150 ரூபாய் உத்தரவாத விலை வழங்குவதாகக் கூறிவிட்டு, இன்று 120 ரூபாவையே வழங்குகின்றது. உற்பத்திச் செலவு 137 ரூபாவாக இருக்கும் நிலையில், விவசாயிகளை அரசு வஞ்சிக்கின்றது.

கல்வி முறையை மாற்றப்போவதாகக் கூறி, வரலாற்றுப் பாடத்தின் முக்கியத்துவத்தை இல்லாமல் ஆக்கியுள்ளனர். மேலும், முறையான முதலீடுகள் இன்றி தொழிற்சாலைகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. அனைத்தையும் குழப்பிக் கொண்டுள்ள இதுவொரு ‘எல் போர்ட் அரசு’ ஆகும்.

எந்தவொரு விடயத்தைப் பற்றியும் அரசுக்குச் சரியான புரிதல் இல்லை. பொய் மற்றும் ஏமாற்றுகள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

69 0 0