உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

கிழக்கு மாகாண சேர். ஜோன் டார்பெட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி – கல்முனை ஸாஹிறா மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
22 பார்வைகள்

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் நாடுபூராக நடைபெறும்  Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டிகள்  (11) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

14 வயதுக்குட்பட்ட ஆண்கள் 100 மீற்றர்  ஓட்டப் போட்டியில் மாணவன் எம்.ஜே. ஹுஸ்னி முதலாம்  இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் , 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் பாடசாலை அணி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாணவன் எப். அஹமட் ஹஸி  இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் 4×50 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பாடசாலை அணி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், எம்.ஏ.எம். அதீப், ஏ.அதீஸ் ஆகியோர் பங்குபற்றிய போட்டிகளில் திறமைச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

இச்சாதனைக்கு  ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS) அவர்களுக்கும் மற்றும் பிரதி அதிபர்கள்,  மாணவனை பயிற்றுவித்த உடற்கல்வி  ஆசிரியர் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், இப் போட்டியில் பங்குபற்றுவதற்கு  ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (14) செவ்வாய்க்கிழமை…

56 0 0
இலங்கை செய்திகள்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம்…

55 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள், படகுகள் வழங்கி வைப்பு.!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள், வலைகள் அழிவடைந்தன.…

40 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை.!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம்…

28 0 0