உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நீர்கொழும்பு சிறை மோதல் எதிரொலி – கைதிகளின் வழக்கு இனி ‘வீடியோ’வில்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
43 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்தப் புதிய நடைமுறை நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றது என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மற்றும் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒரு குழுவினர் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டனர்.

இவ்வாறு மாற்றப்பட்ட கைதிகளை, அவர்களது வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் அந்தந்த நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தவிர்க்கும் நோக்கிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடரும் பொருட்டும், காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் கைதிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன முறையானது, கைதிகளைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதில் ஏற்படும் சிரமங்களையும், பாதுகாப்புக் கவலைகளையும் குறைப்பதற்கு உதவும் என்று திணைக்களம் நம்புகின்றது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (14) செவ்வாய்க்கிழமை…

56 0 0
இலங்கை செய்திகள்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம்…

55 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள், படகுகள் வழங்கி வைப்பு.!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள், வலைகள் அழிவடைந்தன.…

40 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை.!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம்…

28 0 0