உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

தந்தையைக் கொ*லை செய்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் கடற்படைச் சிப்பாய் கைது!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
44 பார்வைகள்

அம்பாந்தோட்டை, தங்காலை, சியம்பலாகொட பகுதியில் வீடொன்றின் முன்னால் முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனான ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் வீட்டின் முன்னாலுள்ள தண்ணீர்க் குழாய்க்கு அருகில் அவர் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மீட்கப்பட்ட சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதால், அவர் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் இளைய மகனான 48 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவர் கடும் மதுபோதையில் இருந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைகளின்படி, மேற்படி சந்தேகநபர் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் தந்தையின் வீட்டிற்குச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களைச் சேகரித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தங்காலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0