உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நீதி அமைச்சரை நீக்கிவிட்டு விசாரணையை நடத்துங்கள்! – நளின் பண்டார வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
40 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றது என்று குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைப் பதவியிலிருந்து நீக்காமல் இந்தச் சம்பவம் குறித்து ஒருபோதும் நியாயமான விசாரணையை முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட நளின் பண்டார எம்.பி.,

“நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளோம்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இன்று ஆட்சிக்கு வந்து அதே பொறுப்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்கின்றனர்.” – என்று குறிப்பிட்டார்.

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்குப் பதிலாக, வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசு எடுத்து வரும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அவர் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வந்து, சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாற்றியமைத்தோம்.

ஆனால், தற்போதைய அரசு மீண்டும் அதனைச் சிறைச்சாலையாக மாற்றுகின்றது. ஒரு நாட்டின் கொள்கை என்பது சிறைச்சாலையைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும். சிறைச்சாலைகள் தேவையென்றால் வேறு பொருத்தமான இடங்களைக் கண்டறியலாம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இவ்வாறு பயன்படுத்துவது தவறு.” – என்றார்.

தகுதியான அரச அதிகாரிகளை முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்வது ஒட்டுமொத்த அரச பொறிமுறையையும் வீழ்ச்சியடையச் செய்கின்றது என்று சாடிய அவர், “சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நீக்கியமை நியாயமற்றது.

அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மஹர சிறைச்சாலைச் சம்பவத்தின் போது இருந்தவாறே, இப்போதும் ஜனாதிபதி தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்.” – என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0