உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
76 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் செய்ய போவதாக பட்டதாரிகள் முன்னரே அறிவித்திருந்த நிலையில் மாவட்டச் செயலகத்தை சுற்றி பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பெருமளவிலான புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் மற்றும் பட்டதாரிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் அரசின் ஒரு சில வேலைவாய்ப்பு நியமனங்களில் கூட அநீதி இழைக்கப்பட்டு வருவதுடன் வேலைவாய்ப்பை வழங்குவதாக தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறான நிலைமையிலே நாங்கள் இப்போது போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

எமக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து நாங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

இனிவரும் காலங்களில் நாம் முன்னெடுக்கும் இவ்வாறான போராட்டங்களில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் அனைத்து பட்டாதாரிகளும் இதில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

65 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0