உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
79 பார்வைகள்

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகள் உடன் இயக்கியமை கண்டறியப்பட்டு, உடனடியாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி(MOH) பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர், குறித்த வடை தயாரிப்பு நிலையத்தில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த நிலையத்தில் உணவுப் பொருட்கள் மனித பயன்பாட்டிற்கு ஒவ்வாத வகையிலும், மிகவும் சுகாதாரமற்ற முறையிலும் தயாரிக்கப்படுவது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக உணவு தயாரிக்கும் இடத்தில் ஈக்கள் அதிக அளவில் காணப்பட்டது, கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படாமல் சுகாதார பாதுகாப்பின்றி தேங்கியிருந்தது, கோழிகள், புறாக்கள் மற்றும் ஏனைய செல்லப்பிராணிகள் கழிவுகள் காணப்பட்ட அசுத்தமான சூழலில் உணவு தயாரித்தமை, உணவு தயாரிக்கும் இடத்தின் ஒட்டுமொத்த சுகாதாரம் மிகவும் மோசமாக இருந்தது போன்ற குறைபாடுகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிலையத்தில் உணவு தயாரிப்பு நடவடிக்கைகள் நிறுத்துமாறு உரிமையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

சுகாதாரத்துறையினரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்து, இடத்தை சுத்தப்படுத்தி, சுகாதாரமான முறையில் மீள் அனுமதி பெறும் வரை நிலையத்தை இயங்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த திடீர் ஆய்வு நடவடிக்கைக்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

63 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0