உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஐ.பி.எல் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி

Uncategorized 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உறுதி செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ஓட்டங்களால் தோற்கடித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த வாய்ப்பை பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த அணி சார்பில் துருவ் ஜூர்ள் 38 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இந்நிலையில் 206 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இதனடிப்படையில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தாவின் அடுத்த சுற்றின் வாய்ப்புக்கான எதிர்பார்ப்புக்களை தகர்த்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சூப்பர் – 4 சுற்றுக்கான தகுதியைப் பெற்றுள்ளது.

இதன்மூலம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைஸஸ் ஐதராபாத் மற்றும் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் சூப்பர்- 4 சுற்றுக்கான தகுதியைப் பெற்றுள்ளன.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0