அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் பதிவாகும் 3-வது உயிரிழப்பு இதுவாகும்.
பென்சில்வேனியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருவர் தட்டம்மையால் உயிரிழந்துள்ளனர்.
பென்சில்வேனியா மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை 676 பேருக்குத் தட்டம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 124 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்புக்குள்ளானவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அளவிலான தரவுகளின்படி 2026-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் 45-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இதுவரை 3294 பேருக்குத் தட்டம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.
2025-ஆம் ஆண்டில் 2289 பாதிப்புகளும் 3 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன.
அமெரிக்காவில் 2000-ஆம் ஆண்டிலேயே தட்டம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், அண்மைய காலங்களில் தடுப்பூசிகள் மீதான தயக்கம் மற்றும் எதிர்ப்பு காரணமாக மீண்டும் இந்த நோய் அதிகரித்து வருகிறது.