உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கண்டாவளை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூன்றிற்கு நிதியுதவி!

இலங்கை செய்திகள் 50 நிமிடங்கள் முன்
37 பார்வைகள்

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் கருனைநாதன்  இளங்குமரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கண்டாவளை கோட்ட பாடசாலைகள் மூன்றிற்கு பதினைந்து இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதியில் உதவி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் இன்று  06.10.2026கண்டாவளை கோட்டத்திற்குற்பட்ட பாடசாலைகளான தட்டுவன் கொட்டி கண்ணகி அம்மன் வித்தியாலயத்திற்கு ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியான கணனி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

அதே வேளை கல்லாறு தமிழ் வித்தியாலயத்திற்கு ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியான கணனி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் குமாரசாமிபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு திறன் வகுப்பறைக்குரிய ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியான  உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், க்ளீன் சிறீலங்கா செயற்றிட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், மற்றும்  வலய கல்வி பணிப்பாளர் க. சிவனருள்ராஜா மாவட்ட செயலக,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  உள்ளிட்டோர். கலந்து கொண்டு குறித்த பொருட்களை வழங்கி வைத்தர்..

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு கோரிக்கை.!

மத்திய மாகாண கண்டி மாவட்டத்தில் உள்ள ஹோப் தோட்ட வைத்தியசாலை, JEDB – ஹேவாஹெட்டையில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…

46 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள் – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம்.!

தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையகத் தமிழ் மக்களை தேசிய நீரோட்டத்தில் அரவணைத்துச்…

61 0 0
இலங்கை செய்திகள்

நாட்டில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது! : பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை!!

இலங்கையில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (06)…

73 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தில் கௌரவிப்பு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது. திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர்…

63 0 0