உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

Uncategorized 13 மணி நேரம் முன்
88 பார்வைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. 

தமது உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேய எண்ணத்துடன், நோயாளியின் குடும்பத்தினர் இந்த உறுப்பு தானத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர். 

இந்த மகத்தான முடிவு, பல உயிர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் வாழ்வதற்கான வாய்ப்பையும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆஷாத் எம். கனீபா தெரிவித்துள்ளார். 

தானமாகப் பெறப்பட்ட இரு சிறுநீரகங்களும், நீண்டகாலமாகச் சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு வாழ்வளிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, நேற்று (2) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது. 

“உறுப்பு தானம் என்பது பல உயிர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதமான கொடையாகும். மன்னாரில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சமூகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உதவும்” என வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். 

மேலும், இந்த மனிதநேயச் செயலுக்குச் சம்மதித்த நோயாளியின் குடும்பத்தினருக்கும், வைத்திய நிபுணர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், சத்திர சிகிச்சை மேற்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்துச் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற ரீதியில் அவர் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

70 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

85 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

94 0 0
Uncategorized

லொனக் தோட்ட பெனச் பிரிவு உள்ளக வீதியை புனரமைக்க மக்கள் கோரிக்கை

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வட்டவளை–லொனக் பிரதான வீதியிலிருந்து பெனச் (மீனாட்சி) தோட்டத்திற்குச் செல்லும் சுமார் 750 மீற்றர் நீளமான உள்ளக வீதியை கொங்கிறீட் செய்து புனரமைக்குமாறு அம்பகமுவ…

97 0 0