உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீண்டும் பரவும் பிளேக் நோய்த் தொற்று? : அச்சத்தில் உலக நாடுகள்!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
75 பார்வைகள்

பிளேக் (Plague) நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ரஷ்ய அதிகாரிகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தகவல் கோரியுள்ளது.

ரஷ்ய அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகளின்படி, மொஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 2,600 மைல் தொலைவில் உள்ள சைபீரிய நகரமான இர்குட்ஸ்க்கில் அமைந்துள்ள பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயதான டாரியா ஷிபிலோவா (Daria Shipilova) என்பவரின் மரணத்தைத் தொடர்ந்து, வைத்தியசாலைகளில் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யாவின் பொதுச் சுகாதார முகவர் நிலையமான Rospotrebnadzor, இந்த மரணம் பிளேக் நோயினால் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தவில்லை.

மேலும், இந்த மரணம் காரணம் கண்டறியப்படாத நிமோனியா காய்ச்சலால் ஏற்பட்டது என அது அளித்த விளக்கம், ரஷ்ய டெலிகிராம் அலைவரிசைகளில் குறிப்பிடப்பட்ட தகவல்களுடன் முரண்படுவதாகத் தோன்றுவதுடன், இந்த அறிக்கை குறித்து இன்னும் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்படாமலேயே உள்ளன.

இர்குட்ஸ்க்கில் உள்ள ஆய்வக ஊழியர் ஒருவர் கடுமையான நிமோனியாவினால் உயிரிழந்தார் என்ற செய்திகளைத் தாம் அறிந்துள்ளதாகவும், ஆனால் இதுவரை மரணத்திற்கான காரணம் எதுவும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், ஆய்வகப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள உத்தியோகபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில், பொதுமக்களுக்கான பொதுச் சுகாதார ஆபத்து குறைவாகவே காணப்படுகிறது.

மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் இந்த ஆபத்து மதிப்பீடு புதுப்பிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா இந்த விவகாரத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நைஜீரியாவில் இராணுவ வானூர்தி விபத்து : 25 பயணிகள் உட்பட 32 பேர் உயி@ரிழப்பு!

நைஜீரியாவின் பெனின் நகரத்திலிருந்து லாகோஸ் நோக்கிப் பயணித்த அந்த நாட்டு இராணுவத்திற்குச் சொந்தமான ஏடிஆர்-42 (ATR-42) ரக வானூர்தி தென்மேற்கு மாநிலமான ஓண்டோவில் விபத்துக்குள்ளானதில், 25 பயணிகள்…

53 0 0
உலக செய்திகள்

செங்கடலின் கரையோரத்தில் யேமன் அரச படைகள் தீவிர இராணுவ நடவடிக்கை

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் யேமன் அரசாங்கம், செங்கடல் கரையோரப் பகுதிகளில் முக்கிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. பொப் அல்-மந்தப் நீரிணை முதல் மொக்கா நகரம்…

77 0 0
உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

86 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

66 0 0