கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை அடுத்து கஞ்சி பரிமாறப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட பிரமந்தனாறு, கொழுந்துப்புலவு, மயில்வாகனபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
