உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்த கருத்து.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
62 பார்வைகள்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கிளிநொச்சியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிடுகையில்,

விஜய் அவர்கள் இன்றைக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட எங்களுடைய விருப்பமான நடிகராக விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அதேபோன்று இப்பொழுது அவர் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அங்கிருக்கின்ற ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் இவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது மக்களுடைய விருப்பம்.

மாற்றம் ஒன்று தேவை என மக்கள் உணர்ந்தார்கள். அந்த மாற்றத்திற்காகவே மக்கள் இன்றைக்கு விஜய் அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றார் என்பது தான் உண்மை.

அந்த வகையில் அந்த மாற்றத்தை விரும்பிய அது மாற்றத்திற்காக வாக்களித்த இந்திய தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

உண்மையிலேயே தொடர்ச்சியான குரல் கொடுக்க வேண்டும் என
இந்திய மீனவர்கள் இன்றைக்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான ராஜதந்திர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டது மிகவும் ஒரு நல்ல விடயம். அண்மையில் கூட இந்தியாவின் கேரளா பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை அதே இந்தியாவே கைது செய்து இருக்கின்றது.

அப்படி இருக்கையில் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் தடை செய்யப்பட்ட இழுவை மடி படகுகளை பயன்படுத்தி இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் மீன்பிடியில் ஈடுபடுவது ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் சட்ட திட்டங்களுக்கும் குற்றமாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு அமைப்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய இலங்கை மீனவர்கள் விடயம் தொடர்பாக மிக விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்களை நேரடியாக எமது குழுவினர் சென்று இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்று கொள்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியாக இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி போக்கிரிகளுக்கு கொள்கை கிடையாது கோட்பாடு கிடையாது. வேலைத்திட்டம் கிடையாது கண்ணோட்டமும் கிடையாது.

அவர்கள் இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி செய்ய முடியாது அவர்கள் அப்படி இப்படி என்று பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அண்மையில் கூட பெரிதும் பேசும் பொருளாக பேசப்பட்ட நிலக்கரி விடயம் தொடர்பாகவும் எதிர்க்கட்சியினர் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்தார்கள் அவர்கள் கூறிய கருத்துக்கள் எதிலும் உண்மை தன்மையும் இல்லை. குறித்த விடயம் தொடர்பாக நேரடி விவாதம் ஊடாக நிரூபித்து காண்பித்து இருக்கின்றோம்.

இவர்களின் பலம் என்ன என்பது பற்றி அண்மையில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் அனைவரும் பார்த்து இருந்தார்கள் அறிந்திருந்தார்கள். ஊடகங்களில் தமது பப்ளிசிட்டியை தேடுவதற்காக இப்படியான கதைகளை கூறி வருகிறார்கள் என்ன தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

65 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0