உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட சந்தை திருத்தப்படவில்லை என வர்த்தகர்கள் கவலை!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
53 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதிகள் கடந்த 30 .04.2026 அன்றைய தினம் வீசிய மினி சூறாவளி காற்றின் காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதியின் கூரை முற்றும் முழுதாக தூக்கி வீசப்பட்டு பாதிப்புக்குள்ளானது

இன்று வரை சிரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. பரந்தன் வர்த்தக சந்தையின் கூரை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாத  காரணத்தினால் வியாபார நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் காய்கறி வியாபாரிகளின் காய்கறிகள் நனைவதால் மீண்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்

மழையில் நனைந்த வண்ணம் தொடர்ச்சியாக வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தை பாதுகாப்பு இன்மை காரணமாக நுகர்வோரும் காய்கறிகள் கொள்வனவு செய்வதற்கு இப்பகுதிகளுக்கு வருவது குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்

இதன் காரணமாக தாம் மிகவும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும் இங்கு வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வியாபாரிகள் தெரிவித்தனர் 

எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து இப்பகுதியில் மேற்கொள்வதற்கு  மிக விரைவில் கட்டடத் தொகுதியை புனரமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவித்தனர் குறித்த சந்தை தொகுதி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

65 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0