உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் மாநாடு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
70 பார்வைகள்

“ஊர் திரள்வோம், உலகிற்குச் சொல்வோம்” எனும் முழக்கத்துடன், ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சி பாரதி ஸ்டார் ஹோட்டலில் இன்று காலை 10:00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில், சமூக செயற்பாட்டாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

குறித்த மாநாட்டில் உரிமைக் குரல்:
உள்நாட்டு பொறிமுறைகளில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சியுள்ள நிலையில், சர்வதேச ரீதியிலான பொறிமுறைகளின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக்கொள்வதே நோக்கம் என்பது இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சுயநிர்ணய உரிமை:
“சுயநிர்ணயம்” என்பது தமிழர்களின் அடிப்படை உரிமை என்பதையும், அதனை அடகு வைக்கவோ, கைவிடவோ அல்லது அழித்தொழிக்கவோ முடியாது என்பதை மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

திருகோணமலைப் பிரகடனம்:
ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தினால் முன்வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க “திருகோணமலைப் பிரகடனத்தை” வலுப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு அமைந்தது.

மக்கள் எழுச்சி:
“எம் உரிமைகளை நீக்கக்கூடிய எந்தவொரு சரணடைதலையும், தலைவணங்கலையும் இன்று வரை நிகழ்த்தவும் இல்லை, இனி நிகழ்த்தப் போவதும் இல்லை” என்ற உறுதியான நிலைப்பாட்டை சமூக செயற்பாட்டாளர்கள் இம்மாநாட்டின் வாயிலாக உலகிற்குப் பறைசாற்றினர்.

நிகழ்வின் இறுதியில், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த மாநாடானது, கிளிநொச்சி மண்ணில் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

65 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0