உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
67 பார்வைகள்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் கைலாயபிள்ளை சிந்துயன் தலைமையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக ஆலய வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து முதல் கல் எடுத்துவரப்பட்டு மைதானத்தில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டன.

முதல் கல்லினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாட்டிவைக்க சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், கிளி சோரன்பற்று கணேச வித்தியாலய அதிபர் சோமசுந்தரம் சிவதாசன், சோரன்பற்று கிராம அலுவலர், அருள்பிரகாஸ் சுபாசினி உட்பட பலரும் நாட்டி வைத்தனர்.

தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

கருத்துரைகளை நிகழ்வின் பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் நிகழ்த்தினர்.

இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

65 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0