உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் பாடசாலைகளில் அலைபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நடைமுறைக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைக்கவுள்ளது.

கல்வி அமைச்சர் பாரனஸ் ஜாக்குவி ஸ்மித் (Baroness Jacqui Smith) பிரபுக்கள் சபையில் (House of Lords) கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை நேரத்தின் போது மாணவர்கள் அலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஏற்கனவே கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் அறிவுறுத்தியிருந்தார்.

தற்போது அந்த வழிகாட்டல்கள் சட்டமாக மாற்றப்படவுள்ளன.

ஆறாம் படிவ (Sixth form) மாணவர்கள், விடுதிப் பாடசாலைகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் மருத்துவத் தேவைக்காக அலைபேசி பயன்படுத்துவோருக்குச் சில விதிவிலக்குகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பாராட்டியுள்ளன.

சமூக வலைதளங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, பல தசாப்தங்களுக்குப் பிறகு கொண்டுவரப்படும் மிக முக்கியமான சிறுவர் பாதுகாப்புச் சட்டமாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0