உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பல்கலைக்கழகப் பிரவேசம்: வடக்கு மாகாணம் முதலிடம்! – ஆளுநர் அலுவலகம் பெருமிதம்..!

Uncategorized 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-

“வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் கடந்த ஆண்டுகளை விட இம்முறை மிகச்சிறந்த நிலையை எட்டியுள்ளன. இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9 ஆயிரத்து 191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 65.19 சதவீதமாகும். இதன்மூலம் மாகாணங்களுக்கு இடையிலான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், உயிரியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் முதலிடத்தையும், பௌதீக விஞ்ஞானம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதிபெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தையும் வடக்கு மாகாணம் பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றவர்களின் வீதத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த வடக்கு மாகாணம், இம்முறை தனது அடைவுமட்டத்தை மேலும் உயர்த்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேவேளை, பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இம்முறை வடக்கு மாகாண ரீதியாக 534 மாணவர்கள் சகல பாடங்களிலும் 3 ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். இது தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் 3.79 சதவீதமாகும். 3 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் வீதத்தின் அடிப்படையிலான தரவரிசையிலும் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து மேலுமொரு சாதனையைத் தனதாக்கியுள்ளது.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0