உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கரைவலை ஆய்வு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மற்றும் சமாச தலைவரை அச்சுறுத்திய கரவலை சம்மாட்டி..!

Uncategorized 6 மாதங்கள் முன்
48 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கரைவலை தொழிலால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோரை கரை வலை சம்மாட்டி சம்மாட்டி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று ஏப்ரல் 09 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு தாழையடியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாடு முழுவதும் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துடன் இணைந்து நாரா நிறுவனம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டது

இதன்போது மனித வலு, மற்றும் உழவியந்திரம் கொண்டு கரைவலை மீன்பிடி மேற்கொள்வது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன

குறித்த ஆய்வை செய்தி சேகரிக்கச் சென்ற வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் மற்றும் சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோருக்கு சுண்டிக்குளத்தில் கரைவலை தொழில் செய்யும் சம்மாட்டி ஒருவரால் கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது

கரைவலை தொடர்பான எதிர்மறையான செய்திகளை பிரசுரிப்பதையும் அதேபோன்று கரைவலை தொடர்பான பிரச்சனைகளில் தலையிடுவதையும் நிறுத்துமாறு குறித்த சம்மாட்டியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத உழவியந்திரத்தை பாவித்து மீன் பிடியில் ஈடுபடுவதால் அதிகளவான சிறு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உழவியந்திரத்தை பாவித்து கரவலை மீன் பிடியில் ஈடுபட அனுமதி கொடுக்க வேண்டாம் என்று சமாச தலைவர் தங்க ரூபன் கேட்டுக் கொண்டுள்ளதுடன் ஆய்விற்கு முதல் நாள் ஆய்வு செய்யப்படவுள்ள இடங்களில் காணப்படும் உழவியந்திரங்களால் ஏற்பட்ட மண்ணரிப்பை கரைவலை தொழிலாளர்கள் மண் கொண்டு நிரப்பியதாக தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

108 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

197 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0