உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
65 பார்வைகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, கமு/திகோ/கோமாரி மெதடிஷ் மிஷன் தமிழ் மகாவித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு நேற்று (05) வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான திரு. T. உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கெப்பிடல் மெட்டல்ஸ் நிறுவனத்தின் முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த வலுவூட்டப்பட்ட மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. சசிதரன், பொத்துவில் பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. க. திலகேஸ்வரம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் கெப்பிடல் மெட்டல்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களுக்காக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலையில் பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகுகோலாகலமாக ஆரம்பமாகியது.…

51 0 0
இலங்கை செய்திகள்

சுரேஷ் சலேவை மீண்டும் சி.ஐ.டி.யினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை…

59 0 0
இலங்கை செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதி எச்.எம்.ஆர்.எம். திலகரத்ன ஆகியோர்…

69 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா கிரகரி வாவியில் அடையாளம் தெரியாத ஆணின் சட@லம் மீட்பு!

நுவரெலியா கிரகரி வாவியில், இன்று 06/10/2026 அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற நுவரெலியா பொலிஸார்,…

58 0 0