உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பராசீக வளைகுடா சுறாக்களுக்கு இரையாகும்; அமெரிக்க இராணுவம் ஈரானின் பகிரங்க எச்சரிக்கை!

Uncategorized 6 மாதங்கள் முன்
68 பார்வைகள்

பாரசீக வளைகுடாவில் எந்தவொரு தரைவழித் தாக்குதல்கள் மற்றும் சில தீவுகளை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரானிய இராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்தது.

அவ்வாறு அமெரிக்கப் படைகள் முயற்சித்தால், அவர்கள் “பாரசீக வளைகுடாவின் சுறாக்களுக்கு நல்ல உணவாகிவிடுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளரும் பிரிகேடியர் ஜெனரலுமான இப்ராஹிம் ஸோல்ஃபகாரி, ஒரு காணொளி அறிக்கை மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எப்ஸ்டீன் வழக்கோடு ட்ரம்புக்கு உள்ள தொடர்புகள் காரணமாக, இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாடிடம் இருந்து அவர் அழுத்தத்தில் இருப்பதாகவும், மேலும் அவர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘கைப்பாவை’ என்றும் ஸோல்ஃபகாரி விமர்சித்துள்ளார்.

“எப்ஸ்டீன் வழக்கில் அவருக்குள்ள பின்னணி காரணமாக, அமெரிக்க ஜனாதிபத டொனால்ட் ட்ரம்ப் மொசாட் என்ற பயங்கரவாத அமைப்பின் அழுத்தத்தில் இருக்கிறார் என்பதிலும், ஈரானுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பில் அவர் இஸ்ரேலியப் பிரதமரின் பகடைக்காயாக மாறியுள்ளார் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஏதேனும் தரைவழித் தாக்குதலோ அல்லது ஆக்கிரமிப்பு முயற்சியோ தொடங்கப்பட்டால், அமெரிக்கப் படைகளை முற்றிலுமாக அழிப்பதற்காக ஈரான் இராணுவம் தருணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறது என்று ஸோல்ஃபகாரி எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

108 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

197 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0