உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வைத்தியர் இன்றி மயங்கிய மாணவன் காத்திருப்பு – வைத்தியசாலையில் பரபரப்பு.!

Uncategorized 6 மாதங்கள் முன்
59 பார்வைகள்

இளவாலை பகுதியில் மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு உடனடி சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் அதிருப்தி எழுந்துள்ளது.நேற்று இளவாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அருகிலுள்ள பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் அங்கு வைத்தியர் இல்லையெனவும், பிற்பகல் 2 மணிக்குப் பின்னரே வருவார் எனவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


மாணவனின் அவசர நிலையை கருத்தில் கொண்டு தாதியர் ஒருவரிடம் முதலுதவி வழங்குமாறு ஆசிரியர் கேட்டபோதும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்து சிகிச்சை வழங்க மறுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மாணவனை வேறுவைத்தியசாலைக்கு அனுப்ப ,அம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுமாறு கோரியபோதும், அது வசதியில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், வேறு வழியின்றி மயக்கமுற்ற மாணவன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார சேவைகளின் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

108 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

197 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0