உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கொக்கட்டிச்சோலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவத்தின் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் கொக்கட்டிச்சோலை நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் 04 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

நாளை 27ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இத்தகு கொடூரங்களை நிகழ்த்திய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது எனவும், சந்தேக நபர்களுக்கு உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாவட்டத்தில் இனிமேல் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாவண்ணம் பொலிஸார் துரித கதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது துணைபோகாதே துணைபோகாதே கொலைக் குற்றவாளிகளுக்குத் துணை போகாதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், நீதியை நிலைநாட்ட அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம், கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே, வழங்கு வழங்கு விரைவாக நீதியை வழங்கு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியில் இருந்து பிரதேச சபை வரையில் பேரணியாக இடம்பெற்று பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் வழங்கப்படுகின்ற நீதியானது இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதமையை உறுதிப்படுத்தும் விதமாக இருத்தல் வேண்டும் எனவும், இச்சம்பவத்தினால் பொதுமக்கள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையிலான அந்நியோன்யம் இல்லாமல் போய்விட்டதாகவும், மக்கள் சந்தேகத்தேகக் கண்கொண்டு தங்களைப் பார்ப்பதாகவும், இதனால் முச்சக்கர வண்டி சாரதிகள் பெரிதும் பாதிப்பினை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்படுகின்ற தண்டணைகள் மூலம் மேற்சொன்ன சந்தேகங்களை நிவர்த்திக்க வழி செய்ய வேண்டும் எனவும் இதன்போது மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபைத் தவிசாளர், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், ஆட்டோ சங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0